சிம்பு படத்தில் தனுஷின் மகன் – பத்து தல அப்டேட்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (12:19 IST)
நடிகர் டிஜே அருணாச்சலம் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஐரோப்பாவி வசிக்கும் இலங்கைத் தமிழரான டிஜே அருணாச்சலம் ஆல்பம் பாடல்களின் மூலம் தமிழ் இளைஞர்களிடம் பிரபலம் ஆனவர். அதையடுத்து தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவரின் மகனாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைப் பெற்று தந்துள்ளது.

இதையடுத்து அவர் இப்போது சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படம் கன்னடத்தில் வெளியான மப்டி படத்தின் ரீமேக் ஆகும். 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் தொடங்கபட்டு விறுவிறுப்பாக மாலத்தீவுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்