டெடி படத்தின் பார்ட் 2 வருதாமே… ஆர்யா அளித்த பதில்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:07 IST)
நடிகர் ஆர்யா நடிப்பில் டெடி படம் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக அமைந்தது.

ஓடிடியில் நேரடியாக இந்த படம் வெளியான நிலையில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆர்யாவே அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்