தாணு தயாரிப்பில் இரண்டு படங்களில் விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:02 IST)
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

கலைப்புலி தாணு தமிழ் சினிமாவின் திறமையான தயாரிப்பாளர்களில் ஒருவர். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் விநியோகம், தயாரிப்பு என இயங்கி வருபவர். பல தோல்விப்படங்களுக்குப் பின்னரும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இப்போதும் இயங்கி வருகிறார். இந்நிலையில் இப்போது இளம் நடிகர்களை தொடர்ச்சியாக தன் படங்களில் நடிக்க வைக்கும் தாணு, விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளார்.

அதில் ஒரு படத்தை விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்க உள்ளாராம். இது அவர்கள் இணையும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்