நேற்று தியேட்டரில்… இன்று தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ் – சந்தானம் படத்துக்கு வந்த சோதனை!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (10:59 IST)
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி திரைப்படம் இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகியுள்ளது.

சந்தானம், யோகி பாபு மற்றும் ரியா சென் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் டகால்டி. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதை அடுத்து தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது போன்ற இணையதளங்களை முடக்க முடியவில்லை. திரையரங்கு சென்றால் செலவு அதிகமாக ஆகிறது என்பதால் மக்களும் இதுபோன்ற பைரஸி தளங்களில் படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்