தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது -விஜய் பட இயக்குநர்

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:39 IST)
தமிழ் சினிமா படங்களை தாழ்த்திப் பேச வேண்டாம் என பிரபல இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான படம் பீஸ்ட். இப்படத்தை     நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம்   கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது, ஆறு நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ .200 கோடி  வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இ ந் நிலையில் பீஸ்ட் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்ததால், சமீபத்தில், தமிழ் சினிமா படங்களின் தரம் குறைந்து வருவதாக  பிரபல நடிகரும்,  தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், ராஜன், யூடியூப் விமர்சகர் மாரியதஸ் உள்ளிட்டோர் விமர்சனங்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில், தமிழ் சினிமா படங்களை தாழ்த்திப் பேச வேண்டாம் என பிரபல இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கன்னடம் வெளியாகி வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவதில் தவறில்லை. ஆனால், அப்படத்தை மட்டும் தலையில் தூக்கிவைத்து, தமிழ் படத்தைத் தாழ்த்துவதும், கன்னடப் படத்தோடு ஒப்பிட்டு, தமிழ் படத்தை விமர்சனம் செய்வதும் அழகல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது. அதேபோல் தமிழ் இயக்குநர்களை திறமையற்றவர்கள் என விமர்சிப்பதும் சரியல்ல..  நாம் எல்லோரும் தமிழுக்கு ரசிகர்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்