’பீஸ்ட்’ படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:23 IST)
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் தோல்விக்கு இது தான் காரணம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ‘ஒரு ஹீரோவின் கால்ஷீட் கிடைத்து விட்டது என்பதற்காக உடனடியாக கதை திரைக்கதையை தயார் செய்யாமல் படப்பிடிப்புக்கு செல்ல கூடாது என்றும் ஒரு கதையை எப்படி எல்லாம் படமாக்க கூடாது என்பதற்கு உதாரணம்தான் ’பீஸ்ட்’  என்றும் கூறினார் 
 
சர்வதேச அளவில் உள்ள ஒரு கனமான விஷயத்தை சொல்லவேண்டும் என்றால் அந்த இயக்குனர் அது குறித்து நிறைய ஆய்வு செய்ய வேண்டும் என்றும் படத்தில் வரும் ராணுவ குறித்த காட்சியில் எந்தவித புரிதலும் இல்லாமல் இயக்குனர் படமாக்கி உள்ளார் என்றும் ஒரு ரசிகனாக ’பீஸ்ட்’ படம்தான் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார் 
 
’பீஸ்ட்’  படத்தில் ஹீரோ, பாட்டு, சண்டை, எடிட்டிங், மெகா தயாரிப்பு என எல்லாம் இருந்தும் இயக்குனர் மட்டும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்