2 வது திருமணத்திற்கு தயாராகும் நாகசைதன்யா...

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்  நாகசைதன்யா. இவரும் சமந்தாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும்  திருமணம் செய்து கொண்டனர்.

4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும், கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்குப் பின் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாகவும், அப்படக் குழுவினர் இருவரையும் மீண்டும் சேர்த்துவைக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டது. இதை ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அப்படி ஒன்றும்  நடக்கவில்லை என்பதால், நாகசைதன்யா 2 வது திருமணம் செய்து வைக்க நடிகர்  நாகார்ஜூனா மற்றும் அமலா இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நாகசைதன்யா 2 வது  திருமணம் செய்யவுள்ளவர் நடிகையாக இருக்க மாட்டார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்