பாரதிராஜாவுக்கு கேட்ட விருது ரஜினிக்கு கிடைத்திருக்கிறது… கலைஞர்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:29 IST)
இந்தியாவில் திரையுலகில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது.

2019 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தமிழ் சினிமா கலைஞர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு சிறிய ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் இந்தாண்டு அந்த விருது தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞரான பாரதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தனர். அதனால் அவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்