விரைவில் காதலர் விஜய் வர்மாவோடு தமன்னாவிற்கு திருமணமா?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (09:42 IST)
தமிழ் சினிமாவில் ரவிகிருஷ்ணா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இப்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் இருக்கிறார் தமன்னா. இதை இருவருமே வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்