மேதகு இயக்குனரின் அடுத்த படம் சல்லியர்கள்… வெளியான சென்சார் தகவல்!

புதன், 19 ஜூலை 2023 (14:22 IST)
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக 2021 ஆம் ஆண்டு வெளியானது ‘மேதகு’. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து அவர் சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த திரைப்படமும் இலங்கை அரசியல் களத்தைக் கொண்டதாகவே உருவாகியுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். மேதகு படத்தின் வெற்றியால் இந்தபடத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது சல்லியர்கள் படத்தின் சென்சார் தகவலை இயக்குனர் கிட்டு வெளியிட்டுள்ளார். படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்