விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

vinoth

சனி, 5 ஜூலை 2025 (12:54 IST)
மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய படங்களை இயக்குனர் மடோன் அஸ்வின் அடுத்து விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பார் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த படம் ஏப்ரல் மாதமே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை படம் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த படத்துக்காக மடோன் அஸ்வின் சொன்ன கதையில் விக்ரம்முக்கு முழு திருப்தி இல்லை என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மற்றொரு காரணமாக விக்ரம்மின் முந்தைய படங்களின் தோல்வியால் அவரின் மார்க்கெட் மதிப்பை விட படத்தின் செலவு அதிகமாகிறது என்பதால் தயாரிப்பாளர் அவரின்  சம்பளத்தைக் குறைக்க சொல்வதாக சொல்லப்படுகிறது. அதற்கு விக்ரம் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா இந்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அந்த படம் பற்றி எந்த தகவலும் இல்லை என விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள். சரியான நேரத்தில் அப்டேட்கள் வரும்.” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அந்த படம் கைவிடப்படவில்லை என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்