எனக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவம்… அழக்கூட முடியவில்லை-தமன்னா சோகம்!

vinoth
வியாழன், 6 பிப்ரவரி 2025 (14:06 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் தமன்னா சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு அத்துமீறல் குறித்து பேசியுள்ளார். அதில் “ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தபோது, எனக்குக் கேரவனில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அப்போது நான் மேக்கப் போட்டிருந்ததால் என்னால் அழக்கூட முடியவில்லை.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்