பாடலைப் பயன்படுத்த அனுமதிக் கேட்ட புதுமுக இயக்குனர்… காசே வாங்காமல் ஒரு ஃபோனையும் பரிசாகக் கொடுத்த TR!

vinoth

வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:44 IST)
சமீபகாலமாக புதுப் படங்களில் பழைய பாடல்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இந்த டிரண்ட்டை சசிகுமார் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் ஆரம்பித்து வைக்க, லோகேஷ் கனகராஜ் அதை ஒரு க்ளிஷே ஆக்கிவிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படத்தில் அதை சிதைத்துவிட்டார்.

இப்படிப் பயன்படுத்தப்படும் விண்டேஜ் பாடல்களில் அதிகளவில் இளையராஜா மற்றும் தேவா ஆகியோரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது அறிமுக இயக்குனர் சசிகுமார் என்பவர் தன்னுடைய முதல் படத்தில் காதல் காட்சி ஒன்றில் டி ராஜேந்தரனின் ஐகானிக் பாடல்களில் ஒன்றான ‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடலை பயன்படுத்த  விரும்பியுள்ளார்.

அதற்காக டி ராஜேந்தரை சந்தித்து அனுமதிக் கேட்க, கதையைக் கேட்டு பிடித்துப் போனதால் பாடலைப் பயன்படுத்த பணம் எதுவும் கேட்காமல் இலவசமாகவேக் கொடுத்துள்ளார் டி ஆர். மேலும் இயக்குனரைப் பாராட்டி ஒரு செல்ஃபோன் ஒன்றையும் பரிசாகக் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்