இந்த படம் மோகன்லாலின் ஹ்ருத்யபூர்வம் திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை 13 நாட்களில் லோகா எட்டியுள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த நான்காவது படம் என்ற சாதனையை தற்போது பெற்றுள்ளது.
இந்த படத்தின் வெற்றியால் இன்று பேன் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையாக மாறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்நிலையில் தனது தந்தை இயக்குனர் பிரியதர்ஷன் தனக்கு அனுப்பிய அறிவுரை மெஸேஜை சமூகவலைதளத்தில் பகிர அது கவனம் பெற்றுள்ளது. அதில் “ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள். வெற்றியால் எப்போதும் தலைக்கனம் வந்துவிடக் கூடாது. தோல்வியால் துவண்டுபோகவும் கூடாது. என்னால் உனக்குத் தரமுடிந்த சிறந்த அறிவுரை இதுதான். லவ் யூ” எனஅதில் கூறியுள்ளார் பிரியதர்ஷன்.