கடந்த சில ஆண்டுகளாக ரவி மோகன் தன்னுடைய திரை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேக்க நிலையை சந்தித்து வருகிறார். இதன் காரணமாக அவர் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நடிகர் ரவி மோகன் தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் யோகி பாபுவை வைத்து “AN ORDINARY MAN” என்ற படத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஒரு பிரம்மாண்டமான வெளிநாட்டு நகரத்தில் யோகி பாபு கையில் பாய், தலையணை என மிரட்சியோடு பார்ப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கபப்ட்டுள்ளது.
இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதில் ரவி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் நடித்திருந்தனர். யோகி பாபுவுக்காக கதை ஒன்றை எழுதியுள்ளதாக சொல்லும் ரவி ஆனால் கதாபாத்திரம் மட்டும் இன்னும் அமையவில்லை என சொல்ல வெவ்வேறு கெட்டப்களில் யோகி பாபு தோன்ற எதுவும் ரவிக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் அவர் லுங்கி மற்றும் பணியனில் தோன்ற அந்த கெட்டப்பால் கவரப்பட்டு திரைக்கதையை எழுதத் தொடங்குவது போல நகைச்சுவையாக ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது.