நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன. ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் க்ளிஷே ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நடிகர் ரவி மோகன் தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் யோகி பாபுவை வைத்து “AN ORDINARY MAN” என்ற படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஒரு பிரம்மாண்டமான வெளிநாட்டு நகரத்தில் யோகி பாபு கையில் பாய், தலையணை என மிரட்சியோடு பார்ப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கபப்ட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.