சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

vinoth

வியாழன், 11 செப்டம்பர் 2025 (09:17 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அவர் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்யவுள்ளர்.

அதையடுத்து தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்திலும் மூன்று விதமான கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் எந்த தாமதமும் இன்றி சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செல்லமே படம் மூலமாக சினிமாவில் நடிகரான அறிமுகமான விஷால் தற்போது 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துப் பேசியுள்ள அவர் “ நான் சாப்பிட்டுக் கொண்டே இந்த வீடியோவில் பேசுகிறேன். ஏனென்றால் நானும் என் குடும்பமும் 21 ஆண்டுகளாக நிம்மதியாக மூன்று வேளை சாப்பிடக் காரணம் நீங்கதான். செல்லமே திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன. என் பாதையை மாற்றியவர்கள் என் குருநாதர் அர்ஜுன் சார், என் அப்பா மற்றும் எங்கள் கல்லூரி பாதர் ராஜநாயஹம். அவர்கள்தான் என்னை உத்வேகப்படுத்தி நடிகர் ஆக்கினார்கள். என்னுடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் சக நடிகர்கள் மற்றும் சக தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்தும் மேலாகக் கடவுளின் குழந்தைகளான எனது ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishal (@actorvishalofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்