நான் சிறந்த நடிகர் இல்லைதான் ஆனா…? – விமர்சனங்களுக்கு சூர்யா அளித்த பதில்!

vinoth

சனி, 3 மே 2025 (12:58 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா திரையரங்குகளில் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளார் என்ற மகிழ்ச்சி அவரது ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசியுள்ளார்.

அதில் “ நான் சிறந்த நடிகர் இல்லை. என்னை சில பேர் ஓவர் ஆக்டிங் நடிகர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இயக்குனர் பாலா அண்ணன் சொன்னதைதான் இப்போது வரை செய்துகொண்டிருக்கிறேன். அவர் கேமராவுக்கு முன்னால் உண்மையாக இருந்துவிட்டுப் போய்விடு என்று சொன்னார். அதனால் நான் என்னுடைய பெஸ்ட்டைதான் எப்போதும் கொடுப்பேன். என்னால் கார்த்தி மாதிரி மெய்யழகன் படத்தில் நடிக்க முடியாது. அதை நானே ஒத்துப்பேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்