தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார் தன் மனதிற்கு நெருக்கமான படங்கள் குறித்து பேசியுள்ளார்.
எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து தனது நடிப்பால், திறமையால் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக வளர்ந்துள்ளார் அஜித்குமார். திரைப்படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனக்கு பிடித்தமான கார் ரேஸ், பைக்கில் சாகச பயணம் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறார் அஜித்குமார். சமீபத்தில் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜித்குமார் தான் நடித்த படங்களில் தனக்கு மிகவும் நெருக்கமான படங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “நான் நடித்த படங்களில் வாலி என் மனதுக்கு நெருக்கமான படம். அதன் பிறகுதான் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டதாக நினைக்கிறேன். அதற்கு முன்னரும் மக்களின் அன்பு கிடைத்திருந்தாலும், வாலி பல கதவுகளை எனக்கு திறந்துவிட்டது.
சில படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் கூட ஓடியிருக்கும் நிலை இருக்கிறது. ஆனால் வாலி, பில்லா, மங்காத்தா, வரலாறு போன்ற படங்கள்தான் என் திறமையை காட்டுவதற்கான படங்களாக அமைந்தன” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K