லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் ரோலக்ஸ் என்ற டைட்டிலில் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும் அந்த கதையை லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் கூறிய போது அதில் நடித்த சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின. அதை லோகேஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவருமே உறுதிப் படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் சூர்யா ரசிகர்களோடு இணைந்து ரெட்ரோ திரைப்படத்தைப் பார்த்த லோகேஷிடம் சூர்யாவோடு இணையும் ரோலக்ஸ் திரைப்படம் எப்போது வரும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் “ரோலக்ஸ் திரைப்படம் எப்போது வருமென்று தெரியாது. இருவரும் பிஸியாக இருக்கிறோம். கூலி திரைப்படத்துக்குப் பிறகு கைதி 2 வரவுள்ளது. ஆனால் கண்டிப்பாக ரோலக்ஸ் படம் பண்ணிதான் ஆகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.