இயக்குனர் வசந்த் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவரைப் பாராட்டி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது குறித்து ஒரு பழைய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் வசந்த் சூர்யாவை 1996 ஆம் ஆண்டு சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில் இயக்குனர் வசந்த் தான் அறிமுகப்படுத்திய நடிகர் சூர்யாவின் சமீபத்தைய படமான சூரரைப் போற்று குறித்து பாராட்டி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வசந்தின் கடிதம்:-
அன்புள்ள சூர்யாவுக்கு,
இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்! தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம் இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.
முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA". என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
இதற்கு சூர்யா, உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார் @itsme_vasanth twitter.com/itsme_vasanth/…
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் விகடன் மேடையில், அழுத ஞாபகம் எப்போது என இயக்குநர் வசந்த் கேட்டார்.
அதற்கு சூர்யா, கார்மெண்ட்ஸ்ல தொழிலதிபர் கனவில் உழைச்சிட்டு இருந்தவனைக் கொண்டு வந்து நேருக்கு நேர் படத்தில் நடிக்க நிறுத்திட்டாங்க…கொல்கத்தாவில் சூட்டிங் நடிப்பு எனக்குச் சுத்தமா வரவே இல்லைன்று யூனிட்டு கடுப்புல இருக்கும்போது, லஞ்ச் பிரேக். இயக்குநர் வசந்த் சார் கீட்ட சார், கல்கத்தா பிரியாணி சூப்பர்ன்னு சொன்னதும் அப்டியா …நால்ல சாப்பிடு ராசா என ஆற்றாமையோடு சொன்னா கணம். கூனிக் குறுகிபோனேன். தலையணை நனைய நனைய நான் அழுத நாள் அதுதான். இப்போ நினைச்சா நிம்மதி தர்ற அழுகை அது என்று தெரிவித்தார்.
இன்று வசந்த் சாரிடம் ஒரு பாராட்டுக் கடிதம் வந்துள்ளதால் சூர்யா அன்று மேடையில் பேசியதை ஒருவர் போட்டோ எடுத்து சூர்யாவுக்கு டேக் செய்துள்ளார், அதில், விகடன் மேடைல பல வருடங்களுக்கு @Suriya_offlசொன்ன ஒரு பதில். அதே வஸந்த் சார்கிட்ட இருந்து இப்படி ஒரு கடிதம். What an Achievement! Wishes a lot Nedumaaran! எனப் பதிவிட்டுள்ளார்.
விகடன் மேடைல பல வருடங்களுக்கு @Suriya_offl சொன்ன ஒரு பதில்.