ஆயுத பூஜைக்கு துண்டு போட்ட இரண்டு ஹீரோக்கள்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:00 IST)
ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியவர்களின் படங்கள் ரிலீஸாக உள்ளன.

பண்டிகைக் காலங்களில் வெளியாகும் பெரிய மாஸ் நடிகர்களின் படங்கள் சாதாரண நாட்களில் வெளியாகும் படங்களை விட வசூலில் முன்னிலையில் இருக்கும். மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலேயே வெளியாகி இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இரண்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் திரைப்படம்.

இரண்டு படங்களுமே இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்றாலும் ஆயுதபூஜையை குறிவைத்தே ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்