’’உனது டுவீட் அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் …’’ சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்

புதன், 3 பிப்ரவரி 2021 (20:40 IST)
உனது டுவீட் அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று சிவகாத்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்குத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் படத்தில் தனக்கான டப்பிங் பணியை முடித்துள்ள  சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படம் டான். இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகிக்கொண்டுள்ளது.

முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்  இந்த படத்தின் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த தகவலை லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் சிவகார்த்தியேர்ன் புரொரெக்சன் டுவிட்டர் பக்கத்திலும் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்