ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவானதங்கலான் படத்தில் நடித்தார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு தங்கலான் படத்தில் கவனம் ஈர்த்த மாளவிகா தற்போது சர்தார் 2 மற்றும் தி ராஜாசாப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியை சமீபத்தில் அவர் நடத்தினார். அதில் ஒரு ரசிகர் “போட்டோஷூட் மற்றும் மாடலிங் செய்ய போடும் உழைப்பை நீங்கள் படங்களுக்காகப் போடுவதில்லை என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வது சரியா?” எனக் கேட்டிருந்தார்.