இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு பயோபிக் படம் என்று தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அதை இயக்குனர் மறுத்துள்ளார்.
இது ஒரு குறுகிய காலப் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் ஐதராபாத் மற்றும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 50 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இந்தி நடிகை ரவீனா டாண்டன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.