‘ப்ரோகோட்’ டைட்டிலைப் பயன்படுத்த தடை… ரவி மோகன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

vinoth

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (15:38 IST)
ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியானப் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆண்டு ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரங்களில் எஸ் ஜே சூர்யா, அரவிந்த் அசோகன், ஸ்ரீநிதி ஷெட்டி, ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ப்ரோகோட் என்ற பெயரில் ஏற்கனவே மதுபானம் ஒன்று உள்ள நிலையில் அந்நிறுவனம் இந்த பெயரை படத்துக்கு வைக்கக் கூடாது என வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் தற்போது நீதிமன்றம் ‘ப்ரோகோட்’ என்ற டைட்டிலைப் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்