ரவி தேஜாவின் அந்த படம் கார்த்திக்கு முக்கியமானப் படமாக அமைந்தது… சூர்யா நெகிழ்ச்சி!

vinoth

புதன், 29 அக்டோபர் 2025 (14:00 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. தெலுங்கு சினிமாவை வாரிசு நடிகர்களே அதிகளவில் கோலோச்சும் நிலையில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிபெற்றவர் ரவி தேஜா.

அவரின் பல ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் கேரியரில் ஒரு தேக்க நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு இப்போது தனிப்பட்ட துயரமாக அவரது தந்தை ராஜகோபால் ராஜு காலமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்குனர் பானு இயக்கத்தில் ‘மாஸ் ஜதாரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சூர்யா “நான் ரவி தேஜாவின் ரசிகன். அதனால் இந்த தருணம் எனக்கு மகிழ்ச்சியானது. அவரது படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்தது. அவரின் விக்ரமார்க்குடு (சிறுத்தை) கார்த்தியின் கேரியரில் முக்கியமானப் படமாக அமைந்தது. இந்த வாரம் அவரின் மற்றொரு பிளாக்பஸ்டரைப் பார்க்கப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்