
பிக்பாஸ் வீட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் - வினோத் காமெடி காம்போ சில நாட்களாக விடுப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதம் ஆகப் போகும் நிலையில் தினம்தோறும் பார்வதி காட்டுக் கத்தலாக கத்துவதை தவிர சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என ஆடியன்ஸ் குறை கூற தொடங்கி விட்டனர். இதற்கு நடுவிலும் ஆடியன்ஸுக்கு பொழுதுபோக்காக இருந்தது வாட்டர்மெலன் திவாகர் - கானா வினோத் காமெடி காம்போதான். அவர்களை பிக்பாஸின் மெய்யழகன் என சொல்லும் அளவுக்கு இது ஹிட்டானது.
இரண்டாவது வாரத்தில் லக்ஸரி ஹவுஸிற்கு திவாகர் வந்தது முதலாக வினோத் - திவாகர் இடையே அடிக்கடி விளையாட்டாக எழுந்த மோதல்கள் நகைச்சுவையாக இருந்தது. விஜய் சேதுபதியுமே அதுகுறித்து பாராட்டினார். ஆனால் தனது புகழை வைத்து கானா வினோத் புகழ் தேடிக் கொள்வதாக நினைத்த வாட்டர்மெலன், வினோத்துடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட தொடங்க பதிலுக்கு வினோத்தும் வாக்குவாதம் செய்ய இருவரிடையே இருந்த காமெடி காம்போ சிதறியது.
கடந்த வாரம் தன்னை வினோத் பாடி ஷேமிங் செய்வதாக விஜய் சேதுபதியிடமே குற்றம் சாட்டினார் வாட்டர்மெலன் திவாகர். இதனால் வினோத் வாட்டர்மெலனிடம் வம்பு இழுப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் தனது பனியனை எடுத்து வினோத் முகம் துடைத்ததாக திவாகர் செய்த பிரச்சினையில் வினோத் செம கோவமாகிவிட்டார்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வாட்டர்மெலன் ஸ்டார் கேமரா முன்னாள் நடிக்க சென்ற நிலையில் அதற்கு இடையூறு தரும் விதமாக வினோத் சத்தமாக பாடினார். இதுகுறித்து திவாகர் வீட்டு தலயான ப்ரவீனிடம் சொன்னபோது அவர் பாடுவது அவர் உரிமை என விலகிவிட்டார். சபரி, விக்கல்ஸ் கூட உங்கள் இருவர் தனிப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என விலகிவிட்டனர்.
இதனால் இனி வரும் நாட்களில் வாட்டர்மெலன் திவாகர் - வினோத் பிரச்சினையில் ஹவுஸ்மேட்ஸ் தலையிடாமல் இருக்கும் வரை அது காமெடி கண்டெண்டாக மாறவே வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K
#Day24 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 29, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/QePrPv1l7z