இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

vinoth

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (06:16 IST)
மலையாள சினிமா ஆண்டுக்கொரு ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ஒன்றைக் கொடுத்துக் கலக்கி வருகிறது. மஞ்சும்மெள் பாய்ஸ், எம்புரான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வசூல் சாதனைகளைப் படைக்க அந்த படங்களின் வசூல் சாதனையை முறியடித்து ‘லோகா’ இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஆகஸ்ட் மாத இறுதியில் துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸானது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ‘லோகா’. 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ‘லோகா’ ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்