ஓ பேபி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நந்தினியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில், இந்த படத்தில் அவர் ஒரு மாறுபட்ட, இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.
	 
	நடிகை சமந்தா நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்கள் வெளியான நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.