தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டன. ஆனால் ஏன் இன்னும் எந்த தமிழ்ப் படமும் அந்த மைல்கல்லை எட்டவில்லை. இத்தனைக்கும் ரஜினி,கமல், விஜய், அஜித் என சூப்பர் ஸ்டார் நடிகர்களும் லோகேஷ், முருகதாஸ் என இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர்களும் உள்ளனர்.
அதில் “காந்தாரா, மஞ்சும்மெள் பாய்ஸ் மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்கள் எல்லாம் அந்த மொழி ரசிகர்களின் உணர்வுகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் தமிழ் மொழியில் வெவ்வேறு மொழி நடிகர்களை நடிக்கவைத்துவிட்டால் அதை பேன் இந்தியா படம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நம் மண் சார்ந்த கதைகளை எடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.