கோவாவில் தொடங்கும் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:31 IST)
சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

சென்னையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூஜை நடந்தது. இதையடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சிவாவின் நெடுநாள் இணை இயக்குனரான ஆதிநாராயணா என்பவர்தான் எழுதியுள்ளார். அதோடு படத்தில் கவிஞர் கபிலன் வைரமுத்துவும் பங்களிப்பை செய்துள்ளாராம்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் கோவாவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு மிகப்பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை இயக்குனர் சிவா படமாக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்