இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பிரமாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
நேற்று, சென்னை மெரினா கடற்கரையில், கலைஞர் நினைவிடம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.