இதுகுறித்து பாஜகவின் நாராயணன் திரிபாதி கூறியபோது, இரு நாட்களுக்கு முன்னர் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் காலியான திருக்கோவிலூர் தொகுதியை 'காலி' என அறிவிக்க தாமதம், தயக்கம் ஏன்?
மீண்டும் தொகுதியில் தலை காட்ட தி மு க வுக்கு பயமா? அல்லது பாஜக வின் A.G. சம்பத் அவர்களின் மீதான அச்சமா? தைரியமிருந்தால், திராணியிருந்தால் பொன்முடி மற்றும் ஸ்டாலின் தேர்தலை சந்திக்கவும் என்று பதிவு செய்துள்ளார்.