நிர்மலா சீதாராமன் புதுவையில் போட்டியிட்டால் தோல்வி அடைவார்: நாராயணசாமி

Mahendran

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:13 IST)
நிர்மலா சீதாராமன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரில் புதுவையில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் தோல்வி அடைவார்கள் என முன்னாள் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் நிலையில் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் குறிப்பாக புதுவை தொகுதியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் புதுவை மாநில துணைநிலை கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்  முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி ’புதுவை தொகுதியில் நிர்மலா சீதாராமன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் என யார் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்கள் என்றும் புதுவை மக்கள் மண்ணின் மைந்தர்களை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்

மேலும் காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் வைத்திலிங்கம் அவர்களை போட்டியிட மேலிடத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்