இந்தியாவின் சூப்பர் ஸ்டார் கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
யாருமே நினைத்துப் பார்க்காத சமயத்தில் உலகில் கொரொனா பரவியது. இந்நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்க வந்தது.
இவ்வருடம் உருமாறிய கொரொனா வைரஸில் இரண்டாம் அலை முந்திய வைரஸைவிட அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தொற்றால்,இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டர் கொரொனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன்,அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதிலிருந்து சுகம் பெற்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்ரீ குரு தேஜ் பகதூர் என்ற கொரொனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அத்துடன் 300 படுக்கை வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்துக் கொடுத்துள்ளார்.