கோடீஸ்ர நிகழ்ச்சில் கலந்து கொண்ட் சூப்பர் ஸ்டார்...ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:00 IST)
மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ளது. அந்த வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 78 வயதாகும் அமிதாப் பச்சன் தன் ரசிகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதில் ‘அரசு 50 வயதுக்குள் உள்ளவர்கள்தான் வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லியுள்ளது. இதனால் 78 ஆவது வயதில் எனது வேலைக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் இருக்கும் திரைப்பட அமைப்பு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்குகள் எல்லாம் நீண்ட காலம் நடக்கும். எனவே இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன். ஒருவேளை வயது வரம்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் வேறு ஏதாவது வேலை இருக்குமா? என உத்தேசித்து சொல்லுங்கள்’ என ரசிகர்களிடம் கேட்டார்.

அமிதாப் பச்சன் சமீபத்தில்தான் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிகழ்ச்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் 3 சீசன்களை சாருக்கான தொகுத்து வழங்கியது போக மீதம் 10 சீசன்களையும் அமிதாப்பச்சனே தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை  மீண்டும் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கான சூட்டிங்கின் போது அனைவரும்  பி இ இ கவச உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்