சன் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிறது நந்தினி சீரியல். திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இவை சீரியலா, மெகா சினிமாவா என்ற பிரமிப்பைத் தந்துள்ளது சீரியல் பார்க்கும் அன்பர்களுக்கு. சன் டிவியில் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருந்தது இந்த சீரியல்.
இந்நிலையில் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும், இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டார் இயக்குநர் சுந்தர் சி. நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, 'உங்களுக்கு பணம்தானே பிரச்சினைனா அதை நான் பாத்துக்கிறேன். உங்க குடும்பத்துக்கு தேவையானதை நான் செய்கிறேன் என்று சொன்னார்.
ஆரம்பத்துல செய்யற மாதிரி செஞ்சி, கடைசில என்னை ஏமாற்றிவிட்டார். இதனால் மனவேதனையில் வேல்முருகன் கடவுள் உங்களுக்கு எல்லா தண்டனையும் கொடுப்பான். நந்தினி என் கதைன்னு உங்க வாயால சொல்ல வைப்பான் என்று கூறியுள்ளார். இதுவரை சுந்தர் சி தரப்பிலிருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.