வாரிசு இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பப் போவது இந்த தொலைக்காட்சிதான்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:52 IST)
சன் தொலைக்காட்சி நிறுவனம் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கள் யாரும் அனுமதிக்கப் படாத நிலையில் சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்