வாரிசு ஆடியோ விழாவில் கமல், ஷாருக்கான்?

புதன், 21 டிசம்பர் 2022 (15:22 IST)
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 
 
இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில்  இந்த விழாவிலர் சிறப்பு விருந்தினராக சிலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் அதை போல் மகேஷ் பாபு மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட வேறு சில பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த தகவல் உண்மையாக இருந்தால் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வேற லெவலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்