கோலங்கள் 2 பற்றி அப்டேட் கொடுத்த இயக்குனர் திருச்செல்வம்!- சீரியல் ரசிகர்களுக்கு குஷி செய்தி!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (08:18 IST)
சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம் பாகம் கூட உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இந்த ஹிட் சீரியலை இப்போது கலர்ஸ் தமிழ் சேனல் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தற்போது இயக்கும் எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கோலங்கள் புகழ் நடிகை சத்யப்ரியாவின் 70 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் திருச்செல்வத்திடம் கோலங்கள் 2 பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “நிறைய நம்பிக்கையுடன் முடிந்த சீரியல் அது. அதன் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். ஆனால் வேறு ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் காலம். கண்டிப்பாக அந்த சீரியல் சன் டிவியில்தான் வரும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்