சன் டிவியின் சூப்பர் ஹிட் கயல் சீரியலில் நடக்கப் போகும் மாற்றம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:40 IST)
சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துவரும் கயல் சீரியல் சன் டிவியின் மிகவும் விரும்பப்படும் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போது பரபரப்பாக ஓடிவரும் கயல் சீரியலுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் சைத்ரா கதாநாயகியாகவும், சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடிக்க, மேலும் பல நடிகர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சஞ்சீவ், இப்போது இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் மனைவி ஆல்யா மானசா நடிக்கும் இனியா தொடரில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்