மீண்டும் இணைந்த கதிர்-கயல் ஆனந்தி: ‘யூகி’ டீசர் ரிலீஸ்

செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:26 IST)
மீண்டும் இணைந்த கதிர்-கயல் ஆனந்தி: ‘யூகி’ டீசர் ரிலீஸ்
நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகிய பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான இந்த படம் தமிழ் சினிமாவின் வெற்றி படங்களில் ஒன்று என்றும் தெரிந்தது 
 
இந்தநிலையில் கதிர் ஆனந்தி ஆகிய இருவரும் இணைந்து மீண்டும் இணைந்து நடித்த திரைப்படம் யூகி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது
 
இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசரில் இருந்து இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்பது தெரிய வருகிறது
 
இந்த படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்