சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடர் வெகுவாக பார்வையாளர்களைக் கவர்ந்த தொடர். இந்த தொடர் விரைவில் முடிய உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியலின் கடைசி கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதை இந்த சீரியலின் கதாநாயகன் சிபு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.