மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

vinoth

வியாழன், 8 மே 2025 (09:20 IST)
விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி. அவர் நடித்துள்ள  ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து சூரி ‘விடுதலை 1 & 2’ படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து மண்டாடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது
.
இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடிக்கிறார் என்றும் தெலுங்கு பதிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்க சூரி வில்லனாக நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அதை மறுத்துள்ளார் சுஹாஸ். இந்த படத்தின் இருவடிவிலும் சூரி கதாநாயகனாக நடிப்பதாகவும் தான் வில்லனாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்