அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படம் மே மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகிறது.
படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ நான் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து சின்ன படங்களாகத் தயாரிக்கலாம் என நினைத்தேன். அதில் 10 கதைகள் வந்தால் ஐந்து கதைகள் சூரி அண்ணனுக்காகதான் வருகின்றன. அந்தளவுக்கு அவரின் வளர்ச்சி உள்ளது. எல்லோருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக சூரி அண்ணன் வளர்ந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.