இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகையான பிபாஷா பாஸுவை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவகேலி செய்யும் விதமாகப் பேசிய வீடியோ இப்போது பரவி வருகிறது. அந்த வீடியோவில் “பிபாஷா பாஸுவின் தசைகள் ஆண்கள் போல வலுவாக உள்ளன. ஆண்களைப் போல இருக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிபாஷா பாஸு இருகிறார் ” எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ அவருக்கு எதிராக விமர்சனங்களை உருவாக்கியது.
இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மிருனாள் தாக்கூர். அதில் “19 வயதில் நான் பல முட்டாள்தனமாக விஷயங்களைப் பேசியுள்ளேன். நான் நகைச்சுவையாக பேசியது அடுத்தவர்களைப் புண்படுத்தும் என்பது கூட தெரியவில்லை. அதற்காக இப்போது நான் வருந்துகிறேன். யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. அழகு எல்லா வடிவங்களிலும் உள்ளது என்பதை எனக்குக் காலம் சொல்லிக்கொடுத்துள்ளது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.