மதுரையின் அடையாளமாக திகழும் இடத்தில் தொடங்கும் சூர்யா சுதா கொங்கரா பட ஷூட்டிங்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:24 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தின் ஒரு பகுதியில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  அதை உறுதிப் படுத்துவது போல இந்த படத்தின் ஷூட்டிங் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் காட்சிகளில் சூர்யா கல்லூரி மாணவர் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்