தங்கள் ஆஸ்தான மேனேஜரை மாற்றிய சூர்யா, கார்த்தி & ஜோதிகா!

புதன், 20 டிசம்பர் 2023 (07:17 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மேலாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை. இவர் முதன் முதலில் ஜோதிகா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான போது அவருக்கு மேனேஜராக பணியாற்றினார். அவர் மூலமாக சூர்யாவின் நட்பு கிடைத்து பின்னர் அவரின் மேனேஜராக தொடர்ந்தார்.

அதன் பின்னர் பல ஆண்டுகாலமாக சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ஷங்கர், அதிதி ஷங்கர், காஜல் அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இப்போது சூர்யா குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் அவரை தங்கள் மேனேஜர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளனராம்.

சூர்யா குடும்பத்தினரின் இந்த முடிவு தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்