விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (10:56 IST)
சில தினங்களுக்கு முன்னர் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக ’விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.

இதையடுத்து அவரின் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவின. ஆனால் விஷால் தரப்போ அவருக்கு வைரஸ் காய்ச்சல்தான் மற்றபடி ஒன்றுமில்லை என்று பதிலளித்துள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியா சர்ச்சை நாயகி சுசித்ரா தற்போது விஷாலை இப்படி பார்ப்பது தனக்கு மகிழ்ச்சியாகதான் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ள அவர் “ நான் கார்த்திக் குமாரோடு வாழ்ந்த போது ஒரு நாள் அவர் இல்லாத போது கையில் ஒயின் பாட்டிலோடு போதையில் விஷால் என் வீட்டுக் கதவைத் தட்டினார். கார்த்திக் குமார் பற்றி பேசி உள்ளே வரட்டுமா என்று கேட்டார். நான் அவர் இல்லை என்று சொல்லி உள்ளே வரக் கூடாது என சொல்லி திட்டி அனுப்பிவிட்டேன். அப்போது ஒயின் பாட்டிலைப் பிடித்திருந்த கைதான் இப்போது நடுங்குகிறது. அதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாகதான் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்